ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் போட்டிகள்!!

814

IPLஐபிஎல் தொடரின் 7வது சீசன் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஐபிஎல் 7வது சீசன் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 7வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் முதல் பாதியும், இரண்டாவது பாதி இந்தியா அல்லது வங்கதேசத்திலும் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி போட்டிகள் ஏப்ரல் 16ல் ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்குகிறது, எனினும் இறுதிப் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 16 போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அபுதாபி, சார்ஜா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளிக்கும் வகையில், மே 1 முதல் 13 வரையிலான போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என்றும், மாறாக பாதுகாப்பு அளிக்கப்படாமல் இருப்பின் இப்போட்டிகள் வங்கதேசத்திலும் நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் ரன்ஜிப் பிஷ்பால் தெரிவித்துள்ளார்.

 

SHARE