ஐக்கிய நாடுகளின் 69வது அமர்வில் பங்கேற்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க் சென்றடைந்தார்

411

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க் சென்றடைந்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

நியூயோர்க் சென்றடைந்த ஜனாதிபதி, அவரின் பாரியார் உட்பட்ட பிரதிநிதிகளை அங்குள்ள இலங்கை பிரதிநிதிகளான பாலித கோஹன, பிரசாத் காரியவசம் மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் வரவேற்றனர்.

ஐக்கிய நாடுகளின் 69வது அமர்வில் பங்கேற்க சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஒரு வாரக்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

நாளை அவர் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் உரையாற்றவுள்ளார்.

இந்தநிலையில் இன்று அவர் காலநிலை தொடர்பான அமர்வில் உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியுடன் இந்த பயணத்தில், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தவிர, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் என்று 15க்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

TPN NEWS

SHARE