ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவி்ல்22 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு

529
3
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவி்ல் இலங்கைக்கு ஆதரவாக 22 நாடுகள் குரல் கொடுத்துள்ளன.

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தேவையற்றது என்றும், இலங்கையின் அனுமதியின்றி அவ்வாறான ஒரு விசாரணையை மேற்கொள்ள முடியாது என்றும் அந்த நாடுகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளுடன் இலங்கை கூட்டாக செயற்பட்டு வரும் நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தேவையற்றது என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைக்குழு தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் எல்லை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும் இந்த நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

எகிப்து, பாகிஸ்தான், வெனிசியூலா, பங்களாதேஷ், சீனா, கியூபா, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளே இலங்கைக்கு ஆதரவாக இவ்வாறு குரல் கொடுத்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணைக்கு வலியுறுத்துகின்றது.

< p>இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் பலமுறை விவாதிக்கப்பட்டுவிட்டது. தனியான விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுவிட்டது.

< p>எனினும் இது தொடர்பில் இலங்கையினுள் விசாரணைகளை மேற்கொள்ள இதுவரை இடமளிக்கப்படவில்லை.

< p>எனவே இலங்கை அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

< p>இதற்குப் பதிலளித்துள்ள இலங்கையின் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான இந்த விசாரணை எதுவித பலனும் தராது என்று தெரிவித்துள்ளார்.

< p>மேலும் இது போன்ற விசாரணைக்கு இடமளிக்கும் சம்பிரதாயத்தை ஆரம்பித்து வைத்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

< p>எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஏனைய நாடுகளும் தண்டிக்கப்படுவதற்கான காரணியாக அமைவதற்கு இலங்கைக்கு விருப்பமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

< ul>< li>ஐ.நா மனித உரிமைகள் சபையில் காட்டமான அறிக்கை! ஏற்க மறுக்கும் இலங்கை
< li>13வது திருத்தம் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம்: ஐ.நாவில் இந்தியா
< li>இலங்கையின் மனிதஉரிமை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் பிளவு
< li>ஐ. நா இலங்கை தொடர்பில் தாக்கல் செய்த அறிக்கை முன்னேற்றகரமானது: பா. ம.க. சட்ட உறுப்பினர் கணேஸ்
< li>எமது பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஆவணமாக வாய்மொழி மூல அறிக்கை உள்ளது: கஜேந்திரகுமார்

ஐ.நா. ஆணைக்குழு விசாரணை! இடமளித்தால் தவறான முன்னுதாரணமாகி விடும்: இலங்கை வாதம்

>

இலங்கை ஒரு இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது: பிரித்தானிய தமிழர் பேரவை
>

ராஜபக்சவைக் கையாள்வது மேற்குலகத்திற்கு பெரிய விடயமல்ல: ச.வி.கிருபாகரன்

>

< p align=”center”>எமது பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஆவணமாக வாய்மொழி மூல அறிக்கை உள்ளது: கஜேந்திரகுமார்

>

>

ஐ. நா இலங்கை தொடர்பில் தாக்கல் செய்த அறிக்கை முன்னேற்றகரமானது:  பா. ம.க. சட்ட உறுப்பினர் கணேஸ்

>

>

< p align=”center”>ஐ.நாவின் வாய்மூல அறிக்கை தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க சரியான பாதையை அமைக்கும்: ஹரி ஆனந்தசங்கரி

< p align=”center”>

< p>பாப்பரசரை பாவித்து ராஜபக்ச அரசியல் லாபம் அடையலாம்: அருட் தந்தை இமானுவேல்

>

 

SHARE