நட்சத்திர ஜோடியாக இருந்தவர் தனுஷ் – ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் தங்களது பிரிவை கடந்த ஆண்டு அறிவித்தனர். இருவரும் தங்களுடைய தனி பாதையில் பயணிக்க போவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
பிரிவுக்கு பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள். வேலை ஒரு பக்கம் இருந்தாலும், தங்களது மகன்களையும் அக்கறையுடன் கவனித்து கொள்கின்றனர். எங்கு சென்றாலும் தங்களுடன் இரு மகன்களையும் அழைத்து செல்கிறார்கள்.
மீண்டும் இணைகிறார்களா
சமீபத்தில் கூட ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படம் வெற்றியடைய தனுஷ் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக இப்படியொரு முடிவை இருவரும் எடுத்துள்ள்ளார்களாம். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலும் தனுஷ் – ஐஸ்வர்யா தரப்பில் இருந்து வெளிவரவில்லை. பிரபல பத்திரிகையாளர் தான் இதைப்பற்றி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.