வரலாற்று சிறப்பு மிக்க நாவலான பொன்னியின் செல்வனை எப்படியாவது படமாக்க வேண்டும் என எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பலரும் ஏற்கனவே முயற்சித்தனர், ஆனால், அது முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், அந்த முயற்சியை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
இந்த பொன்னியின் செல்வம் நாவலில், அறுபதுக்கும் மேற்பட்ட மிக முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்று உள்ளன. குந்தவை, வந்தியத் தேவன், பழவேட்டரையர், பூங்குழழி, ஆழ்வார்க்கடியான், நந்திதி உள்ளிட்ட பல கேரக்டர்கள் இதில் மிகவும் முக்கியமானவை. இந்த கேரக்டர்களின் முக்கியத்துவம் படத்தில் எந்த இடத்திலும் குறைந்து, சிதைந்து விடாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, இந்த கேரக்டர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் நடிகர்-நடிகையரை தேர்வு செய்து கொண்டிருக்கிறார், மணிரத்னம்.
படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு உள்ளிட்டோரை நடிக்க வைக்க ஏற்கனவே பேசி முடித்து விட்டார். இதில், சோழ ராஜ்ஜியத்தை பழிவாங்கும் கேரக்டரான நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது என்று முடிவாகி விட்டது. இதை கேன்ஸ் பட விழாவுக்கு சென்று திரும்பிய ஐஸ்வர்யா ராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.
ஆனால் இந்த கேரக்டரில் முதலில் நயன்தாராவை நடிக்க வைக்க, படக்குழுவினர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது, நந்தினி கேரக்டரில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதை கேள்விபட்டதும், படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டதாகவும் தகவல் பரவி இருக்கிறது.