ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை.. போட்டோ மூலம் விளக்கம் கொடுத்த நடிகை

74

 

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் கடந்த 2007ல் காதல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய் அபிஷேக்கை விவாகரத்து செய்யப்போகிறார் என செய்தி பரவி வருகிறது. ஐஸ்வர்யா இல்லாமல் அபிஷேக் மட்டும் பல இடங்களுக்கு சென்றதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் குடும்பத்துடன் ஐஸ்வர்யா வரவில்லை. அதனால் விவாகரத்து பற்றிய கிசுகிசுக்கள் அதிகம் வர தொடங்கியது. இருப்பினும் பச்சன் குடும்பம் இது பற்றி எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.

ஐஸ்வர்யா ராய் பதிவு
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிஷேக் பச்சன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் அவர் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

SHARE