ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

306

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவின் தலைமையில் 3ஆம் திகதியன்று மாலை 5 மணியளவில் தபாலகவீதி மற்றும் சாமிமலை வீதிகளில் திடிர் பரிசோதனை மேற்கொண்ட போது ஐஸ் எனும் போதைப்பொருள் வைத்திருந்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தபலாக வீதியில் வசித்து வரும் லிபோடர் என்ற சந்தேக நபரிடம் இருந்து 73மில்லிகிரேம் போதை பொருளும்,சாமிமலை வீதியில் கணபதி என்ற சந்தேக நபரிடம் இருந்து 70மில்லிகிராம் போதைபொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சந்தேகநபர்களை 4ஆம் திகதியன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

SHARE