ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் பாக். தலிபான்கள் கூட்டணி

415

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு உருவாக்கியுள்ளனர். அவர்களின் ஆதிக்கத்தை தடுத்து அழிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகள் கூட்டணியாக ஈடுபட்டுள்ளன.

இவர்களின் நிலைகளின் மீது குண்டு வீசி அழித்து வருகின்றனர். அதனால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் வகையில் அவர்களுக்கு பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் கூட்டணி அமைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தலிபான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் ஷாகி துல்லா ஷாகித் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஒரு இ–மெயில் அனுப்பியுள்ளார்.

அதில் உங்களுடைய எதிரிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து எதிர்க்கின்றனர். நீங்கள் எங்களது சகோதரர்கள் உங்களது வெற்றியால் நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம்.

உங்களுடைய மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் துணை நிற்போம். பிரச்சினைக்குரிய காலங்களில் உங்களுக்கு ஆதரவாகவும், அணுசரனையுடனும் பக்கபலமாக ஆதரவு தருவோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகளின் நாட்டுக்கு தலிபான் தீவிரவாதிகள் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போரில் அவர்களுக்கு உதவ சென்றுள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானில் அல்கொய்தா தலிபான்களை தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் உருவாகியுள்ளது. பெஷாவரில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஆதரவு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

SHARE