ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவருக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை

297

சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது.

சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசு சுட்டுக் கொன்றது. பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் பலர் அண்டைநாடான ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களில் கடந்த பெப்ரவரி மாதம் சிரியாவால் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட சிலரில் 12 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கெவின் கோனோட், லியோனார்ட் லோபெஸ், சலிம் மச்சாவ் ஆகிய மூவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE