ஐ.நா, கூட்டமைப்பு சந்திப்பு: மீள்குடியேற்றத்திற்கு ஏன் தாமதம்? ஹுசைன் கேள்வி

354

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் இன்று காலை நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை பெற்றுத் தருவதாக மனித உரிமை ஆணையாளர் தமக்கு உறுதியளித்ததாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அத்துடன், அரசியல் கைதிகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணம் குறித்தும் செய்ட் அல் ஹூசைன் இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வினவியுள்ளார்.

அத்துடன், பிரதமருடனான கலந்துரையாடலின் போது மீள்குடியேற்றம் தொடர்பாகவும், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் இன்று கலந்துரையாடுவதாக ஐநா மனித உரிமை ஆணையாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இதன்போது உறுதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE