ஐ.நா விசாரணை அறிக்கை குறித்த கட்சியின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படும் – பிமல் ரட்நாயக்க

284

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை தொடர்பிலான ஜே.வி.பி கட்சியின் நிலைப்பாடு இன்று நடத்தப்பட உள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடு எனவும், இது குறித்து 2009ம் ஆண்டே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இலங்கை விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு மிகவும் நிதானத்துடன் நோக்கப்பட வேண்டியது ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில தசாப்தங்களாக அமெரிக்கா தலையீடு செய்த நாடுகளின் மக்களது உரிமைகள் அதிகளவில் முடக்கப்பட்டதே தவிர உறுதிப்படுத்தப்படவில்லை என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை குறித்த ஜே.வி.பி.யின் திட்டவட்டமான நிலைப்பாடு இன்றைய தினம் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE