7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி 2–வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது.
இந்த ஐ.பி.எல். போட்டியில் முத்திரை பதித்த புதுமுக இந்திய வீரர்கள் வருமாறு:–
அக்ஷர் பட்டேல் (பஞ்சாப்):
குஜராத்தை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீரரான இவர் இந்த ஐ.பி.எல்.லில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த தொடரின் வளர்ந்து வரும் சிறந்த வீரர் விருதை பெற்றார். தனது அபாரமான பந்து வீச்சால் அக்ஷர் பட்டேல் வங்காளதேச ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். ஐ.பி.எல்.லில் 17 விக்கெட் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு அவர் கொடுத்த ரன் சராசரி 6.13 ஆகும்.
வோரா (பஞ்சாப்):
19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் தொடக்க வீரரான இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தக்க வைத்துக்கொண்டது. புஜாராவுக்கு வாய்ப்பு கொடுத்ததால் தொடக்கத்தில் இவர் ஆடவில்லை. அவர் சோபிக்காததால் வோரா வாய்ப்பை பெற்றார். இதை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டு அதிரடியாக விளையாடினார். 8 ஆட்டத்தில் 324 ரன்கள் எடுத்தார். சராசரி 40.50 ஆகும்.
யகவேந்திரா ஷாஹல் (பெங்களூர்):
அரியானாவை சேர்ந்த சுழற்பந்து வீரரான இவர் இந்த ஐ.பி.எல். போட்டியில் நன்றாக பந்துவீசினார். முக்கியமான கட்டத்தில் இவரை கேப்டன் வீராட் கோலி பயன்படுத்திக்கொண்டார். பெங்களூர் அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக திகழ்ந்த இவர் 12 விக்கெட் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு கொடுத்த ரன் சராசரி 7.1 ஆகும்.
ரிஷி தவான் (பஞ்சாப்):
இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இவர் ஆல்ரவுண்டர் வரிசையில் திகழ்கிறார். 2013–14 ரஞ்சி சீசனில் சிறப்பாக செயல்பட்டதால் பஞ்சாப் அணியில் இடம் பெற்றார். அவரது ஸ்டிரைக்ரேட் 109.33 ஆகும். 13 விக்கெட் கைப்பற்றினார்