ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை பதிவு செய்தது.
அனுஜ் ராவத்
சென்னை சேப்பாக்கத்தில் CSK மற்றும் RCB அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடந்தது.
முதலில் துடுப்பாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்களும் விளாசினர். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் முஸ்தஃபிசூர் 4 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ரச்சின் ரவீந்திரா விளாசல்
பின்னர் களமிறங்கிய சென்னை அணியில், தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 15 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ஓட்டங்கள் குவித்தார்.
ரஹானே 19 பந்துகளில் 27 ஓட்டங்களும், மிட்செல் 22 ஓட்டங்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா, தூபே சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இருவரின் மிரட்டலான ஆட்டத்தினால் CSK அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தூபே 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களும், ஜடேஜா 17 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 25 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர்.