கனடாவின் ஒட்டாவாவின் பார்ஹேவன் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களது பூதவுடல்களுக்கும் நாளைய தினம் இறுதிக் கிரியை மேற்ள்ளப்பட உள்ளது.
கனடிய பௌத்த காங்கிரஸ் இது தொடர்பில் அறிவித்துள்ளது. இந்த இறுதிக் கிரியைகள் பொது இறுதிக் கிரியைகளாக நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஒட்டாவா இன்பினிட்டி கொன்வென்சன் நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் பிழைத்த விக்ரமசிங்கவின் உடல் நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
19 வயதான பேர்பியோ டி சொய்சா என்ற இளைஞரின் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி 4 சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பேர்பியோ, அலைபேசி காணொளி நேரலை வழியாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது.