பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட மகா சம்மேளனம் இடம்பெறவுள்ளது.
‘போராட்டத்தை ஆரம்பிப்போம் – ஹம்பாந்தோட்டையில் மாபெரும் மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளில் தங்காலை நகரில் இன்று சனிக்கிழமை (30) பிற்பகல் 02 மணிக்கு இடம்பெறவுள்ளது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
இதன்போது கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள இந்த சம்மேளனத்தில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளன கூட்டத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
முதலாவது மாவட்ட மகா சம்மேளனம்
மேலும் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு நாடளாவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பொதுஜன பெரமுனவின் முதலாவது மாவட்ட மகா சம்மேளனம் தங்காலை நகரில் இடம்பெறவுள்ளது.
மே தின கூட்டத்தை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.