உலகில் அதிகரித்து வரும் இணைய பயனாளர்கள் அளவிற்கு ஹேக்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நமது அசாதாரணத்தினால் தான் ஹேக்கர்கள் சுலபமாக நமது கணக்குகளில் ஊடுருவி விடுகின்றனர்.
ஹேக்கர்களிடமிருந்து ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கு பின்வரும் எளிய தந்திரங்களை பின்பற்றுங்கள்.
VPN பயன்படுத்த வேண்டியது அவசியம்!
கணினி பாதுகாப்பாக திகழ VPN tool மிக முக்கியமானதாக திகழ்கிறது. VPN tool நமது ஐபி முகவரியை மறைத்து அனைத்து விவரங்களையும் பாதுகாப்பாக, பத்திரமாக வைக்க உதவும்.
ஒரே பாஸ்வோர்ட் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
சமூக வலைதளத்தில் ஒருவருக்கே பல கணக்குகள் இருக்கும். இந்நிலையில், பலர் பாஸ்வோர்டை மறக்காமல் இருக்க அனைத்து கணக்கிற்கும் ஒரே பாஸ்வோர்டை பயன்படுத்துவர்கள். இது நாம்செய்யும் மிகப்பெரிய தவறு.
நமது பாஸ்வோர்டை ஹேக்கர்கள் ஹேக் செய்தால் அதன் மூலம் அவன் நமது மற்ற கணக்குகளிலும் எளிதாக ஊடுருவ முடியும். அதனால், ஒரே பாஸ்வோர்டை தவிர்க்க வேண்டும்.
இரண்டு வழி சரிபார்ப்பை பயன்படுத்தவும்!
கிட்டத்தட்ட அனைத்து சமூக ஊடக தளங்களில் தற்போது இரண்டு வழி சரிபார்ப்பு அம்சம் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் சமூக ஊடக கணக்கில் பகிரும் தகவல்களை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
அனைத்து கணக்குகளையும் இணைப்பது ஒரு தவறான யோசனை!
நாம் பெரும்பாலும் எளிதாக அணுக அனைத்து கணக்குகளையும் இணைத்து வைத்திருப்போம். இது தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் மற்ற கணக்குகளையும் எளிதாக அணுக நேரிடும்.
பொது WiFi பயன்படுத்துவதை தவிர்க்கவும்!
பொது WiFi பயன்படுத்துவது மூலம் வைரஸ், மால்வேரினால் ஹேக்கர்களுக்கு நமது தகவல்களில் எளிதில் கிடைக்க நேரிடும்.