ஒன்லைன் வங்கிச் சேவையில் கடவுச் சொற்களாக ஈமோஜிகள்

787
தற்போது உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்து வரும் ஒன்லைன் வங்கிச் சேவையில் கடவுச் சொற்களாக Pin Code பயன்படுத்தப்பட்டு வருகின்றது.எனினும் இவற்றில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக எதிர்காலங்களில் ஈமோஜிகள் (Emogis) எனப்படும் குறியீடுகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இத்தகவலை பிரித்தானியாவிலுள்ள Intelligent Environments எனும் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சாதாரணமாக Pin Code உதவியுடன் 7,290 வகையான கடவுச் சொற்களை உருவாக்கும் அதே சமயத்தில் ஈமோஜிகள் மூலம் மில்லியன் கணக்கான (3,498,308) கடவுச் சொற்களை உருவாக்கிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதி உச்ச பாதுகாப்பினை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE