ஒருமுறை சார்ஜ் செய்தால் 955 கிலோமீற்றர் பயணம் செய்யும் மின்சார பேருந்து

254

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

இன்றைய காலகட்டத்தில் வாகனத்தில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பெறுமளவில் மாசுபடுவதை நாம் இயல்பாகவே உணரலாம்.

இருந்தும் இதனை தவிர்க்கும் பொருட்டு பல நாடுகளில் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது. மேலும் இத்தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் பெறுமளவில் வரவேற்படைந்து வருகின்றது.

ஆனால், இந்த மின்சார வாகனங்களின் பயண தூரம் மிகக்குறைவாகவே அமைந்தது. மேலும் இது பல தொழிநுட்பவியலாளர்களுக்கு சவாலாகவும் காணப்பட்டது.இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு தற்போது அமெரிக்காவில் புதிய மின்சார பேருந்து ஒன்று அறிமுகம் செய்யபட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த புரொடெர்ரா என்ற நிறுவனம் இந்த பேருந்தை அறிமுகம் செய்துள்ளது.

இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 மைல் அதாவது 965 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யுமாம்.மேலும் 42 அடி நீளம் கொண்ட இந்த பேருந்தில் 40 பேர் பயணிக்கும் இருக்கை வசதி அமைந்துள்ளது.

இந்த ஆண்டு புரொடெர்ரா பேருந்துக்கள் கடந்த ஆண்டை விடவிற்பனையில் 220 சதவீதம் உயர்ந்துள்ளது.

SHARE