ஒரு வருடமாக அனுஷ்கா நடிக்கும் படம் 

417




ஒரு வருடமாக ஒரே படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. கமல், விக்ரம் போன்ற ஹீரோக்கள், ஷங்கர், பாலா போன்ற இயக்குனர்களின் படங்கள் வருடக்கணக்கில் தயாராவது உண்டு. ஆனால் ஹீரோயின்களை பொறுத்தவரை ஒரு வருடத்தில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிடுவார்கள். திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட  பெரும்பாலான ஹீரோயின்கள் இப்படித்தான் இதுவரை நடித்து வருகின்றனர். ஆனால் தற்போது அனுஷ்கா இதிலிருந்து விதிவிலக்காகி இருக்கிறார். தமிழ், தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் மகாபலி (தெலுங்கில் பாஹுபாலி) என்ற படத்தில் கடந்த ஒரு வருடமாக அனுஷ்கா நடித்து வருகிறார்.

இதற்காக குதிரை ஏற்றம், வாள் சண்டை போன்ற பயிற்சிகளை பெற்றார். ரூ. 175 கோடி செலவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டு பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்திருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி இதன் ஷூட்டிங் தொடங்கியது. நேற்று முன்தினத்துடன் ஷூட்டிங் தொடங்கி ஒருவருடம் ஆனது. இதையொட்டி இப்படத்தின் ஷூட்டிங் எப்படி நடக்கிறது என்பது பற்றிய சிறப்பு முன்னோட்டத்தை ராஜமவுலி படமாக்கி வெளியிட்டார்.

பெரும்பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரிலும், கேரளாவிலும் படமாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். இதில் தமன்னாவும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்

 

SHARE