ஒரேஒரு படத்தில் நடித்துள்ள இயக்குனர் கௌதம் மேனன் அப்பா- என்ன படம், யார் பாருங்க

91

 

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் ஏகப்பட்ட இயக்குனர்கள் களமிறங்கிவிட்டார்கள், மக்களும் புது இயக்குனர்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

அப்படி புது இயக்குனர்கள் வந்தாலும் காலம் கடந்தாலும் தங்களின் படைப்புகளின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இயக்குனர் சிலர் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒரு இயக்குனர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். 2001ம் ஆண்டு மாதவன், ரீமாசென், விவேக் மற்றும் பலர் நடிப்பில் மின்னலே படம் மூலம் திரைக்கு வந்தவர் தான் கௌதம் மேனன்.

முதல் படம் மூலமே பட்டிதொட்டி எங்கும் கலக்கியவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என அடுத்தடுத்து தனது படைப்புகள் மூலம் முன்னணி இயக்குனராக வளர்ந்தார்.

அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

இயக்குனர் அப்பா
கௌதம் மேனன் தான் இயக்கிய ஒரு படத்தில் தனது அப்பாவை ஒரு முக்கியமான காட்சியில் நடிக்க வைத்துள்ளார். அது கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் தான்.

தனது தந்தை கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதால் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளாராம். இந்த படத்தில் அப்பா இருக்க வேண்டும் என்று எண்ணிய கெளதம் மேனன், கற்க கற்க பாடலின் ஒரு காட்சியில் பாருக்குள் நுழைந்து கமல் ஹாசன் சுட்டு தள்ளும் காட்சி இடம் பெரும்.

அந்த ஷாட்டில் தனது தந்தையை நடிக்கவைத்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன்.

SHARE