ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பலி

365
கனடாவில் தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பலி

கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் நள்ளிரவில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அப்போது அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறினர்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். ஒரு ஆணும், பெண்ணும் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் சிரியா அகதிகள் ஆவர்.

SHARE