இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த எஸ்வந்த்பூர் – தாத்நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலை 2 மணியளவில் ரயிலின் உணவு தயாரிக்கும் பெட்டியில் (பேண்ட்ரி காரில்) இந்த விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை ரயில் ஊழியர்கள் தனியாக கழற்றி விட்டனர். இதனால், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பதுடன் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
குறித்த விபத்துக் காரணமாக விஜயவாடா- விசாகப்பட்டினம் வழியாக செல்லும் ரயில்கள் தாமதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.