ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு செக் வைக்கும் சொந்த ஊழியர்கள்: வேலையை ராஜினாமா செய்ய போவதாக போர்க்கொடி

143

 

ஓபன் ஏஐ நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழியர்கள் போர்க்கொடி
அண்மையில் நிறுவனத்துடனான வெளிப்படைத்தன்மையிலும், தொடர்பிலும் சரியான முறையில் இருக்கவில்லை என தெரிவித்து சிஇஓ-வாக பதவி வகித்த சாம் ஆல்ட்மேனை ஓபன் ஏஐ நிறுவனம் பணியில் இருந்து நீக்கம் செய்தது.

இதையடுத்து நிறுவனத்தின் நடவடிக்கைகளை கண்டித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் கிரேக் ப்ரோக்மேன் உட்பட முக்கிய ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.

ஓபன் ஏஐ இயக்குநர் குழு மாற்றப்பட வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஓபன் ஏஐ நிறுவனத்தில் உள்ள 770 ஊழியர்களில் 500 பேர் கையெழுத்திட்ட முறையீட்டு கடிதத்தை நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர்.

தங்களது கடிதத்தில் உள்ள கோரிக்கை ஏற்கப்படாமல் போனால் தங்கள் பணியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும், மைரோசாப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேன் பணியாற்ற உள்ள ஏஐ பிரிவில் தாங்கள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் பிற தரப்பினர் என அனைவரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக மீண்டும் சாம் ஆல்ட்மேனை நியமிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

 

SHARE