ஓமனில் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி

86

 

ஓமானில் பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போன இருவரை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு தெரிவித்துள்ளது.

மோசமான காலநிலை காரணமாக முசந்தம், அல் புரைமி, அல் தாஹிரா மற்றும் அல் தகிலியா ஆகிய ஐந்து அலுவலகங்களில் உள்ள அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பணியை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆறு பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் திங்கள்கிழமை மூடப்படும் என்று ஓமானிய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

SHARE