சூர்யா நடிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை 10-ற்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடவுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பாட்னி, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் தான் இப்படத்தின் டீசரை வெளியிட்டு இருந்தனர். மிரட்டலாக இந்த டீசர் இதுவரை Youtube-ல் 17 மில்லினக்கும் மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த டீசரில் VFX வேற லெவலில் இருந்தது என்று தான் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
படத்தின் கதை
இந்த நிலையில், கங்குவா படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டைம் ட்ராவல் கதைக்களத்தில் தான் கங்குவா படம் உருவாகி இருக்கிறதாம். 1700ஆம் நூற்றாண்டில் வாழும் ஹீரோ சூர்யா, டைம் ட்ராவல் செய்து 2023ஆம் ஆண்டு வருகிறாராம். 1700ல் முடிக்க முடியாத சில காரியங்களை அவர் எப்படி தற்போது முடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை என கூறி வருகிறார்கள்.