கசினோ இல்லை என்கிறது அரசாங்கம்? இருக்கு என்கிறார் பெக்கர்!

657

இலங்கையின் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மூலோபாய திட்டத்தின் கீழ் நவீன ஹோட்டல்கள் அமைக்கப்படவுள்ள போதும் அதில் கசினோவுக்கு இடமில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது.

எனினும் குறித்த ஹோட்டல்களில் உலக தரம் வாய்ந்த கசினோ வர்த்தகம் இடம்பெறும் என்று அவுஸ்திரேலிய கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பெக்கரின் இணையத்தளம் தொடர்ந்தும் கூறிவருகிறது.

இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கெசினோ உடன்பாடுகள் குறித்தும் அந்த இணையத்தளத்தில் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது குறித்து அண்மையில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அரசாங்கம், புதிய ஹோட்டல் வர்த்தகத்தில் கெசினோ இல்லை என்று கூறுகின்ற போதும் பெக்கரின் இணையத்தளத்தில் கசினோ வர்த்தகம் தொடர்பான விடயங்கள் மாற்றப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

SHARE