கச்சிதமா புருவப் பராமரிப்பு

629

முகத்தை எடுப்பாக காட்டவும், முகபாவனை மாற்றத்தின் போதும் புருவம் முக்கிய பங்காற்றும். சிலருக்கு இயற்கையாகவே இத்தகைய புருவங்கள் அமைந்து விடுவதுண்டு. சிலர் ப்யூட்டி பார்லர்களுக்கு சென்று புருவ வடிவமைப்பை முகத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்கின்றனர். இந்த வகையில் புருவப் பராமரிப்பு குறித்து இங்கே பார்ப்போம்…

உங்களது முகத்துக்கு பொருந்தக்கூடிய புருவ அமைப்பு என்பது அவரவர் உடல் அம்சங்களை உள்ளடக்கியதாகும். உங்களது புருவத்தை மூன்றாக பிரித்துக் கொண்டால், அதில் அடர்த்தியான பகுதி மூக்கின் இணைப்புப் பகுதியில் இருந்து தொடங்க வேண்டும். நடுப்பகுதியில் வளைவு இருக்க வேண்டும். மெல்லிய பகுதியின் முடிவு கண்களின் மூலைப் பகுதியில் இருக்க வேண்டும்.

அடர்த்தியான புருவம் பெறுதல்

அடர்த்தியான புருவம் பெறுதல்

புருவத்தில் காலியாக உள்ள பகுதியில் பவுடர், பென்சில் அல்லது ஜெல் மூலம் மை பூசி நிரப்ப வேண்டும். மாநிறம் கொண்டவராக இருந்தால் முடி நிறத்தை விட லைட்டாக 2 முறை மை பூச வேண்டும். மெல்லிய பொன்நிறம் அல்லது நரை முடி கொண்டவராக இருந்தால் 2 முறை டார்க்காக மை பூசவும். இதில் சந்தேகம் ஏற்பட்டால் பிரவுனிஷ் கிரே கலர் அனைவருக்கும் பொருந்தக் கூடியதாகும். புருவத்தின் வளைவு பகுதியில் சிறிய அளவில் மை தேய்த்து, பின்னர் பிரஷ் மூலம் கூடுதலாக இருக்கும் மையை அகற்றிக் கொள்ளலாம்.

ஸ்டென்சில்கள்  

ஸ்டென்சில்கள்

சரியான புருவம் என்பது உங்களது தனிப்பட்ட எலும்பின் அமைப்பை பொருந்து இருக்கும். இதில் ஸ்டென்சில் பயன்படுத்தினால் அது அசல் வடிவத்தில் இருந்து விலகி சென்று செயற்கை புருவம் என்பதை காட்டிவிடும். இதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். ஸ்டென்சில் பயன்படுத்தி அமைக்கப்படும் புருவம் உங்களை கோபம் கொண்டவரை போல் தோற்றமளிக்கும். மேலும், வயதான அல்லது ஒருதலைபட்சமான தோற்றத்தை உருவாக்கம். அதனால் ஸ்டென்சிலுக்கு குட்பை சொல்லவிட்டு இயற்கையான புருவ அமைப்பை பராமரிப்பதற்கான முயற்சியை வேண்டும்.

கூந்தலை ஒத்து இருக்க வேண்டும்

உங்களது கூந்தலின் நிறத்தை மாற்றினால் அதற்கு ஏற்ப புருவத்தின் நிறத்தையும் மாற்ற வேண்டும். உங்களுக்கு நடுங்காத கைகள் இருந்தாலும் வீட்டில் டை அடிப்பதை தவிர்த்துவிட வேண்டும். அப்போது தான் நீங்கள் தொழில் சார்ந்த கலரிஸ்டாக இருப்பீர்கள். அவசரமாக புருவத்தை சரி செய்ய வேண்டும் என்றால் பிளெண்ட் மஸ்காரா அல்லது கான்சீலர் டார்க்கர் அல்லது லைட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இயற்கைத்தோற்றம்

இயற்கைத்தோற்றம்

மாடர்ன் பெண்ணாக தோற்றமளிக்க புருவத்தை செதுக்கவோ, குறைக்கவோ, நீட்டவோ வேண்டிய அவசியம் இல்லை என்பதை நடிகை கெமில்லா பெல்லே நிரூபித்துள்ளார். உங்கள் புருவம் செழிப்பானதாக காட்சியளிகக 3 மாதங்களுக்கு புருவத்தில் உள்ள ஒரு முடியை கூட அகற்ற (பிளக்) கூடாது. அதன் பின்னர் அதை தொழில் ரீதியாக வடிவமைக்க வேண்டும். அல்லது நீங்களே வெளியில் தெரியும் தேவையற்ற முடிகளை அகற்றி சரி செய்து கொள்ள வேண்டும். சிறந்த தோற்றமளிக்க புருவத்தை மை மூலம் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

டுவீசர்ஸ் 

டுவீசர்ஸ்

சரியான முடி அகற்றும் உபகரணத்தை (டுவீசர்ஸ்) பயன்படுத்த வேண்டும். அது மிக முக்கியம். உருண்டை வடிவிலான கூர் அல்லது கூர்மையான முடி அகற்றும் உபகரணத்தை பயன்படுத்த வேண்டுமா என்ற சந்தேகம் எழும். வல்லுநர்கள், குறிப்பாக இதற்கு முன்பு முடியை அகற்றாதவர்கள் கூரான உபகரணம், தட்டையான கூர் கொண்ட உபகரணத்தை தான் விரும்புவார்கள். இதன் மூலம் சரியான புருவ வடிவத்தை எளிதில் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதே சமயம் நீளமான முடியை அகற்றிவிடலாம். குட்டையான மற்றும் வணங்கா முடியை குறிப்பிட்ட திசையை நோக்கி திருப்பிக் கொண்டு உபகரணத்தின் கூர்மையான பகுதியின் மூலம் முடியை இழுத்துவிட வேண்டும்.

கீழ்ப்பகுதி முடியை அகற்றலாமா?

கீழ்ப்பகுதி முடியை அகற்றலாமா?

உண்மையான வடிவமைப்பு என்பது புருவத்தை கீழிருந்து மேல் நோக்கியதாக இருக்க வேண்டும். மேற்புறத்தில் உள்ள முடியை அகற்றுவதன் மூலம் தட்டையான புருவத்தை அளிக்கும். இது கொடூரமான தோற்றத்தை ஏற்படுத்தும்.

கீழ் பகுதியில் எப்போது முடி அகற்றும் உபகரணத்தை பயன்படுத்த வேண்டும்

புருவத்தின் கீழ்புற தோல் பகுதியில் சிறிய புள்ளி அளவிலான முடி வளர தொடங்கியவுடன் அதை அவசர அவசரமாக அகற்ற வேண்டாம். இதற்காக தோலை அறுத்து வடுவை ஏற்படுத்திவிட வேண்டாம். ஒரு நாள் காத்திருந்தால் அந்த முடி வளர்ந்து தோலில் நுழைந்து வெளியே வரும். அப்போது அதை அகற்றலாம். இடைப்பட்ட காலத்தில் அதை மறைக்க வேண்டும் என்றால் கான்சீலர் பயன்படுத்தலாம்.

சிறந்த வழிகாட்டி

சிறந்த வழிகாட்டி

உங்களது சொந்த பராமரிப்பில் உள்ள புருவத்தின் மீது திருப்தி இல்லை என்றால் சலூன் நிபுணரை அணுகலாம். அவர் உங்களது முகத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த வடிவமைப்பை ஏற்படுத்தி தீர்வை கொடுப்பார். அப்போது வீட்டிலேயே முகத்தை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டால், வரும் காலங்களில் புருவ பராமரிப்புக்கு உதவியாக இருக்கும். பொலிவுடன் இருக்க வாரத்திற்கு ஒரு முறை புதிதாக வளரும் முடிகளை அகற்றிவிட வேண்டும். மேலும், அதிக பொலிவு பெற 6 வாரம் கழித்து மீண்டும் சலூன் வல்லுனரை அணுகலாம்.

கண்களை திறங்கள் 

கண்களை திறங்கள்

சுருண்ட கண் இமை முடியை நீட்டிவிடுவதன் மூலம் அகண்ட கண்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். மஸ்காரா பயன்படுத்துவதற்கு முன்பு இதை செய்ய வேண்டும். உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் கடினமாக கட்டுப்படுத்தக் கூடாது. சதையை கிள்ளக் கூடாது. இமை முடியை மடித்துவிடக் கூடாது. அல்லது வெளியில் இழுத்து விடக் கூடாது. இமை முடியின் வேர் பகுதியில் இருந்து நுணி வரை கர்லிங் செய்துவிட வேண்டும். முக்கோண வடிவ கர்லரால் இமை முடியின் வெளிப்புறத்தை அடைவது கடினமாக இருக்கும்.

மஸ்காராவை பிரஷ் செய்யுங்கள்

 

மஸ்காராவை பிரஷ் செய்யுங்கள்

உங்களது மஸ்காரா மட்டும் இமை முடியை நீளமாகவும், முழுமையாகவும் ஆக்கிவிடாது. இதற்கு பிரஷ்ஷூம் ஒரு காரணம். ரப்பர் தோகை கொண்ட பிரஷ் மெல்லிய இமை முடிகளை நீட்டிவிட வேர் ப குதியில் இருந்து நுணி வரை பயன்படுத்தலாம். ஆனால் அதே சமயம் பிளாஸ்டி தோகை கொண்ட பிரஷ்கள் தூய்மையான இயற்கை பொலிவு கொண்ட இமை முடி கோடு உருவாக உதவும்.

ஃபைபர் தோகை கொண்ட பிரஷ் அடர்த்தியான இமை முடி மற்றும் விளிம்பு அதிகரிப்புக்கு உதவும். மஸ்காரா பயன்பாட்டை விரும்பினாலும் நல்ல முகப் பொலிவு கிடைக்க விதவிதமான பிரஷ்களை பயன்படுத்துங்கள். இவை அழகு சாதன பொருட்கள் விற்பனை கடைகளில் கிடைக்கும். மெல்லிய பயன்பாடு முடி சிக்குவதில் இருந்து பாதுகாக்கும்.

உங்களது கண்கள் பயங்கரமான சிலந்தியை போல் காட்சியளிக்க வேண்டாம் என்றால் மஸ்காராவில் நனைத்த பிரஷ்ஷை பேப்பர் டவலில் (டிஷ்யூ பேப்பர் அல்ல) துடைத்து கூடுதல் மஸ்காராவை அகற்றிக் கொள்ள வேண்டும். பிரஷ் தோகையை தளர்த்த அழுத்தி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்பது கிடையாது. சூடான ஈர துணி கொண்டு துடைத்தாலே போதுமானது. அலர்ஜியுள்ள கண்களுக்கு மேக் அப் ரிமூவரில் பஞ்சு அட்டையை நனைத்து பயன்படுத்த வேண்டும். அட்டையை இமை முடியில் கீழ் நோக்கி சில முறை பயன்படுத்த வேண்டும்.

அன்று இரவில் மஸ்காராவின் துகள்கள் கண்ணத்தில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கிறதா?. அதனால் டியூபிங் மஸ்காராவை பயன்படுத்த வேண்டும். டியூபிங் மஸ்காரா திப்பி திப்பியாக துகள்களை தெரியவிடாது. சுடு நீரில் கழுவினால் சுத்தமாகிவிடும். வல்லுனர்கள் டியூபிங் மஸ்காராவை தான் பரிந்துரை செய்கிறார்கள்.

அற்புத புருவங்கள்

அற்புத புருவங்கள்

போலி இமை முடிகள் ஹாலிவுட் அழகுக்கு இணையாக இருக்கும். இவை தனித்தனியான இமை முடியாகவும், முழு அளவிலான இமை முடியாகவும் கிடைக்கிறது. கண் இமையின் மேற்புறத்தில் பசையை வைத்துவிட்டு 2 முடி அகற்றும் உபகரணம் மூலம் இமை முடியை எடுத்து ஒட்ட வேண்டும். பசை அடர்த்தியாக வைத்து உபகரணத்தை பயன்படுத்தி இமை முடியை பொருத்த வேண்டும். டார்க் தோல் உள்ளவர்கள் கருப்பு அல்லது பிரவுன் நிறத்தில் உள்ள டார்க் பசையை பயன்படுத்த வேண்டும்.

செய்ய வேண்டியது... வேண்டாதது 

செய்ய வேண்டியது… வேண்டாதது

இமை முடியை நீளச் செய்தல் மூலம் நீண்ட, முழு அளவிலான, செழிப்பான விளிம்பு பகுதி 2 முதல் 3 வாரங்கள் வரை இருக்கும். இதன் பிடித்தம் காரணமாக மஸ்காரா பயன்படுத்த முடியாது. வறண்ட பகுதியாக தான் வைத்திருக்க வேண்டும். அதனால் நீச்சலுக்கு பயன்படுத்தப்படும் கண்ணாடியை வாங்கி வைத்துக் கொண்டு தலை குளிக்கும் போதோ அல்லது முடியை அலசும்போதோ பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

SHARE