கடந்த வருடம் எமது மாகாணசபைக்கு வேலைத்திட்டங்கைள முன்னெடுப்பதில் பல தடங்கல்கள் இருந்தன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளதாக நம்புகின்றோம் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்

436

 

கடந்த வருடம் எமது மாகாணசபைக்கு வேலைத்திட்டங்கைள முன்னெடுப்பதில் பல தடங்கல்கள் இருந்தன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளதாக நம்புகின்றோம் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா வைத்தியசாலையில் தியாகி அறக்கொடை அமைப்பால் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

sathiyalingam 5656d

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் – வவுனியா வைத்தியசாலைக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்துள்ளோம். அந்தவகையில் 240 மில்லியன் ரூபா செலவில் வவுனியா வைத்தியசாலையில் விபத்து விசேட சிகிச்சை நிலையமொன்றை அமைக்கவுள்ளோம். இது மாத்திரமின்றி வட மாகாணத்தில் பல வைத்தியசாலைகளின் தேவைகளும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எமது மாகாணத்தில் நிலத்தடி நீரில் இரசாயன பொருள்களை பயன்படுத்துவதனால் கிருமிகளுக்கு மேலதிகமாக இரசாயன பதார்த்தங்களும் பெருவாரியாக உள்ளதை அவதானிகக் முடிகின்றது. ஆகவே தற்போது வட மாகாணத்தில் பெரும் குடிதண்ணீர் திட்டங்கள் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது வவுனியாவில் பேராறு குடிநீர்த்திட்டம் கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது. அதில் 60 வீதமான திட்டம் முடிவடைந்துள்ளது. எனவே வெகு விரைவில் வவுனியா நகரம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த திட்டத்திற்கு பின்னால் பல விவசாயிகளின் கண்ணீர் இருந்த போதிலும் தற்போது அது தேவையான திட்டம் என்ற வகையில் விவசாயிகள் அவர்களுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்து தமது விவசாய நிலங்களை தற்போது விட்டுக்கொடுத்துள்ளார்கள். அது போலவே யாழ்ப்பாணத்திலும் நீர் விநியோகத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அது போலவே நிலத்தடி நீரை காப்பாற்றுவதற்கு வைத்தியசாலையின் மலக்கழிவுகளை உரிய முறையில் அகற்றவேண்டிய தேவையுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் யுனொப்ஸ் என்ற அமைப்பு 230 மில்லியன் ரூபா செலவில் செயற்படுத்தவுள்ளது. அத்திட்டம் 2016 ஆம் அண்டு நிறைவடையும் வித்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது – என்றார்.

SHARE