கடல் அளவு தரவுகளை சேமிக்கும் கடுகு அளவு சேமிப்பு சாதனம்

526

 

நினைத்துப் பார்க்க முடியாத, அதிக அளவு கொண்ட தரவுகளை எளிதில் கையாள அதிகமாக பயன்படுத்தப்படுவது மெமரி கார்டு.இதனை நாம் பொதுவாக ஸ்மார்ட் போன்களில் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆரம்ப காலக்கட்டத்தில் மிகச் சிறிய அளவினான மெமரி கார்டுகளே (memory card) பயன்பாட்டுக்கு வந்தன.

1990ம் ஆண்டு ஆரம்பத்தில் தான் இத்தகைய மெமரி கார்டுகள் சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. தொழிற்சாலைகளிலும், மோடம் (Modem) போன்ற இணைய வசதி சாதனங்களிலும் வந்தது.

இதைத் தொடர்ந்து மெபைல் (Mobile), கமெரா (Camera), லாப்டாப் (laptop), டேப்லெட் (Tablet), வீடியோ ஹேம்ஸ் (video games) போன்றவற்றில் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த மெமரி கார்டுகள் Encoding, Storage, retrieval என்ற மூன்று முறைகளில் கொடுக்கப்படும் தகவலை சேகரிக்கிறது.

Encoding மூலம் தரப்படும் தகவலானது குறிப்பிட்ட இடத்தில் சேகரிக்கப்படுகிறது. Storage அந்த தகவலை நிலைத்து வைத்திருக்க பயன்படும்.

Retrieval கொடுக்கப்பட்ட தகவலை தேவையான போது எடுத்து பயன்படுத்த வழிவகை செய்கிறது. இவை எல்லாம் சிலவகை transistor உதவியுடன் செயல்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது MOSFET transistor ஆகும்.

இதில் உள்ள memory circuits-களில் ON அல்லது OFF என இரு முறைகளில் மாறி மாறி சிறிய அளவினான மின்சாரம் பாயும் போது இது தனது வேலையை தொடங்குகிறது.

மெமரி கார்டு ஒரு சிறிய அளவினான microcontroller கொண்டுள்ளது. Microcontroller-ஐ ஒரு கணனியின் CPU ஆக நினைத்துக் கொண்டால் எளிதில் புரியும்.

இவை மெபைல் போனுடன் இணைப்பை ஏற்படுத்தும் போது தனது வேலையை கண் இமைக்கும் நேரத்தில் Clock Signal மூலம் செய்துவிடுகிறது.

தற்போது வந்திருக்கும் மெமரி கார்டுகள் தண்ணீரால் கூட பாதிப்படையாத வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் Samsung நிறுவனம் ஒரு மெமரி கார்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

தற்போது 512 GB அளவில் மிகச் சிறிய வடிவிலான மெமரி கார்டுகள் கூட வந்து விட்டன. இவற்றின் அளவு மேலும் அதிகரித்தால் அதில் ஆச்சரியப்படக் கூடிய விடயம் ஒன்றுமில்லை.

SHARE