கடல் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட அட்டகாசமான சப்பாத்து!

235

சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கை பொருட்களை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.

இதனை சில நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. ஆனால் முதன் முறையாக அடிடாஸ் நிறுவனம் கடல் சார்ந்த கழிவுகளைப் பயன்படுத்தி சப்பாத்துக்களை தயாரித்துள்ளது.

இவை மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடியதும், கடலில் பயன்படுத்துகின்றதுமான பிளாஸ்டிக்கினைக் கொண்டு முப்பரிமாண பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 7,000 வரையிலான சப்பாத்து சோடிகளை அடிடாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இவற்றினை தயாரிப்பதற்கான கழிவுப் பொருட்கள் அனைத்தினையும் மாலைதீவு கடற்பரப்பிலிருந்து பெற்றுக்கொண்டுள்ளது.

கால்களுக்கு மிகவும் இதமாக காணப்படும் இக் காலணிகள் இம்மாத நடுப்பகுதியில் இருந்து ஒன்லைன் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.

இக் காலணிச் சோடி ஒன்றின் விலையானது 220 அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகின்றது.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் காலணிகளுக்கு கிடைக்கும் வரவேற்பினை அடிப்படையாகக் கொண்டு 2017ம் ஆண்டில் மில்லியன் கணக்கான சப்பாத்துக்களை உற்பத்தி செய்ய அந் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

SHARE