AFC தொடர் போட்டியில் அல் நஸர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் அணியை வீழ்த்தியது.
பதிலடி கோல்
Al-Awwal மைதானத்தில் நடந்த இப்போட்டியில் அல் நஸர் மற்றும் அல் அய்ன் அணிகள் மோதின. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் அல் அய்ன் அணி வீரர் Soufiane Rahimi அபாரமாக கோல் அடித்தார்.
அதன் பின்னர் அவரே 45வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடிக்க, அடுத்த 5 நிமிடங்களில் (45+5) அல் நஸர் வீரர் அப்துல்ரஹ்மான் கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.
இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் அல் அய்ன் வீரரின் பிழையால் (Own Goal) அல் நஸர் அணிக்கு 3வது கோல் கிடைத்தது.
துள்ளிக் குதித்த ரொனால்டோ
ஆனால், கூடுதல் நேரத்தில் (103) அல் அய்ன் வீரர் சுல்தான் அல் ஷம்சி கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
எனினும், அல் நஸர் அணிக்கு 118வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நட்சத்திர வீரர் ரொனால்டோ கோலாக மாற்றினார்.
அதுவே வெற்றிக்கான கோலாக மாறியது. இதன்மூலம் அல் நஸர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.