கட்டுநாக்க விமான நிலையத்தில் உட்பிரவேசிக்கும் பயணிகளின் நலன் கருதி விசேட பாதுகாப்பு

214

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உட்பிரவேசிக்கும் பயணிகளின் நலன் கருதி விசேட பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அசௌகரியத்தை  தவிர்த்துக்கொள்ளுவதற்காகவும் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டள்ளது.

வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகள் அவர்களின் வாகனங்களில் விமான நிலையத்தின் உள்நுழையும் வாயில் வரைக்கும் செல்லவும் , வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் தங்களின் வாகனங்களில் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லமுடியாத நிலைகாணப்பட்டது .

ஆனால் தற்போது, குறித்த  சிரமங்களை தவிர்த்துக்கொள்ளுவதற்காக விமான நிலைய உள் நுழையும் மற்றும் வெளியேறும் வாயில்கள் வரைக்கும்  வாகனத்தில் செல்ல முடியும் என தெரவிக்கப்படுகின்றது.

விமான போக்குவரத்து பயணிகளின் நலன் கருதி குறித்த வசதி நடைமுறைப்படுத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளர்  கேப்டன் கிஹான் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE