கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 65 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

404
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 65 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட மதிய உணவே விஷமாகியுள்ளதாக தொழிற்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு தொடர் வாந்தியோடு தலைசுற்றலும் ஏற்பட்டதாகவும், இன்று காலை இவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போது 35 பேர் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சம்பவம் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE