ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, திருச்சி சிறப்பு முகாமில் இருந்து நேற்றிரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
இதன்படி, இன்று (03) முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்த நிலையில் குறித்த மூவரும் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரும் தற்போதுவரை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை அழைத்துச்செல்லச் சென்ற உறவுகள் இவர்களின் வருகைக்காக காத்துநிற்கின்றனர்.
இவர்கள் மூவருக்குமான விசாரணை இன்னும் முடிவடையவில்லை எனத் தெரிய வருகிறது.