கணவன் மனைவியை கொன்றது ஏன்?

97

 

கந்தேநுவர, ஹுனுகல பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக கணவரே மனைவியை கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹுனுகல, அல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கந்தேநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE