வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரீபியன் லீக் போட்டியில் பார்படோஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக்குக்கு எதிராக செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் டினோ பெஸ்ட் பந்து வீசுகையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளு முள்ளுவில் முடிந்தது.
இருவருக்கும் இடையிலான இந்த உரசல் ஓட்டல் அறை வரை நீடித்தது. இந்த நிலையில் தெலுங்கானா தூதராக நியமிக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கிய இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனது கணவர் சோயிப் மாலிக்குக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘கிரிக்கெட் ஆடுகளத்தில் இன பாகுபாடா? இது கேவலமாக இருக்கிறது. சோயிப் மாலிக் அடிக்கவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் அவரை டினோ பெஸ்ட்டை அடித்து இருக்கலாம். டினோ பெஸ்டின் செயல் முட்டாள்தனமானது’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.