நாளை இந்த விசேட வழிபாட்டு நிகழ்வில் கைதிகள் பங்கேற்க உள்ளனர்.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜிதீரவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த வழிபாட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கைகள் நாளை தலதா மாளிகையில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நூறு கைதிகள் கண்டி தலதா மாளிகையில் வழிபாடு செய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய சிறுபான்மை சமூக மத வழிபாட்டுத் தளங்களுக்கு கைதிகள் அழைத்துச் செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள பௌத்த மக்களின் புனித தளமான தலதா மாளிகையை மட்டும் வழிபாடு செய்ய சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான அறிக்கையின்றி முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் கொலை வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே கொலை சம்பந்தமான வழக்கு இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான ஆரம்ப வழக்கு அறிக்கைகள் மற்றும் வழக்கு பொருட்களை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் இருந்து பெற்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு இதற்கு முன்னர் உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், இன்று அவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், வழக்கு விசாரணைகளை நவம்பர் 13ம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேக நபர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பிலும் ஏனைய சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.