தொகுப்பாளராக பாப்புலர் ஆகி அதன் பின் விஜய் டிவியின் ஷோக்களில் காமெடியில் கலக்கி வருபவர் மணிமேகலை. அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பல சீசன்கள் கலக்கினார்.
ஆனால் திடீரென கடந்த வருடம் அந்த ஷோவில் இருந்து விலகிவிட்டார். இனி கோமாளியாக வர மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார். அதன் பிறகு அதே ஷோவில் தொகுப்பாளராக வந்தார் அவர்.
லோன் கூட கட்ட முடியல..
அதன் பின் மணிமேகலைக்கு சமீப காலமாக விஜய் டிவியில் இருந்து எந்த வாய்ப்பும் வருவதில்லை. குக் வித் கோமாளி ஷோவுக்கும் எண்டு கார்டு போட்டுவிட்டதாக கூறப்படும் காரணத்தால் அந்த வாய்ப்பும் மணிமேகலைக்கு கிடைக்கவில்லை.
தற்போது தான் கட்டிவரும் வீட்டின் ஹவுசிங் லோன் கூட கட்ட முடியவில்லை என அவர் சோகமாக கூறி இருக்கிறார்.