கண் இமைகள் நீளமாக வளர இந்த முறைகளை பயன்படுத்துங்கள்!

360

பெண்களுக்கு அழகே கண்கள் தான். கண்கள் அழகாக இமைகள் கொஞ்சம் பெரிதாக இருந்தால் அது அவர்களின் அழகு இன்னும் வசீகரமாக இருக்கும். கண் இமைகள் காற்றில் ஏற்படும் தூசுகளால் கண்களுக்கு எந்த பிரச்சினையும் வராமல் பாதுகாக்கிறது. கண் இமைகள் கொஞ்சம் கம்மியாக இருப்பவர்கள் கடைகளில் விற்கும் செயற்கை கண் இமைகளை வாங்கி பொறுத்திக் கொள்கிறார்கள். கவலையை விடுங்கள். உங்கள் கண் இமைகள் கொட்டாமல் இருப்பதற்கும், இமைகள் அடர்த்தியாக வளர்வதற்கும் வீட்டில் உள்ள சாதாரண பொருட்களை வைத்து உங்கள் கண்களில் உள்ள ரோமங்களை அடர்த்தியாக மாற்றி விடலாம்.

தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளர ஆரம்பிக்கும். அந்த சீப்பில் வைட்டமின் ஈ எண்ணெயில் நன்கு நனைத்து மெதுவாக சீவ வேண்டும். இதனால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் இதனை தினமும் செய்தால் முடி கொட்டாமல் நன்கு வளரும்.
ஆமணக்கு எண்ணெய்:இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் அலோ வேரா ஜெல்லை இரவில் கண் இமைகளின் மேல் தடவி வந்தால் கண் இமைகள் அடர்த்தியாகவும் வலிமையாக வளர ஆரம்பிக்கும்.

வசலின் ஜெல்லி:வாசலினை மஸ்காரா பிரஷின் மூலம் கண் இமைகளின் மேல் பிரஷ் செய்ய வேண்டும். இது கண் இமைகளை அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர உதவி செய்கிறது.
தேங்காய்ப் பால்:தேங்காய்ப் பாலை பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்க வேண்டும். இது கண் இமைகளுக்கு தேவையான மிருதுத்தன்மையையும் கண் இமைகள் அடர்த்தியாக வளர உதவி செய்யும்.
ஆலிவ் எண்ணெய்:ஆலிவ் எண்ணெய் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கும், கண் இமைகளுக்கும் சிறப்பான ஒரு இயற்கை மருந்து. இந்த எண்ணெய்யில் வைட்டமின் E மற்றும் ஒலிக் அமிலம் அதிகம் இருக்கும். இது உங்கள் கண் இமைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதுடன் கண் இமைகள் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

SHARE