கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பதிலாக கன்டாக்ட் லென்ஸ்களையே (Contact Lense) பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இக் கன்டாக்ட் லென்ஸில் பிற்காலத்தில் தொழில்நுட்பங்களும் புகுத்தப்பட்டன.
குறிப்பாக கூகுள் மற்றும் சாம்சுங் நிறுவனங்கள் கன்டாக்ட் லென்ஸினை மிகவும் மெலிதானதாக வடிவமைத்ததுடன், சிறிய ரக கமெராவினையும் இணைத்து சாதனை படைத்திருந்தது.
ஆனால் சோனி நிறுவனம் இவற்றினை எல்லாம் தாண்டி கண் சிமிட்டுவதன் மூலம் காட்சிகளை வீடியோ பதிவு செய்து அவற்றினை சேமித்து வைக்கக்கூடிய கன்டாக்ட் லென்ஸினை உருவாக்கியுள்ளது.
சாதாரண ஒரு மனிதரின் கண் சிமிட்டும் நேரம் 0.2 செக்கன்களிலிருந்து 0.4 செக்கன்கள் வரை எடுக்கும்.
எனினும் இக் கன்டாக்ட் லென்ஸ் ஆனது 0.5 செக்கன்கள் வரையான நீடித்த நேர இடைவெளியிலும் செயல்படக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இத் தொழில்நுட்பமானது ஸ்மார்ட் ஐ (Smart Eye) என அழைக்கப்படுகின்றது.