கதாநாயகியான பிக் பாஸ் மாயா.. படத்தின் ஹீரோ யார் தெரியுமா

74

 

கடந்த பிக் பாஸ் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் மாயா. இறுதிக்கட்டம் வரை சென்ற மாயா ஒரு பக்கம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும், மறுபக்கம் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே கமலுடன் விக்ரம், விஜய்யுடன் லியோ போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் விக்ரம் படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் மாயா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியான மாயா
இந்த நிலையில், தெலுங்கில் கதாநாயகியாக மாயா அறிமுகமாகியுள்ளார். ஆம், தெலுங்கில் உருவாகி வரும் Fighter Raja எனும் திரைப்படத்தில் நடிகை மாயா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஹீரோவாக ராம்ஸ் என்பவர் நடிக்கிறார்.

மேலும், இப்படத்தை கிருஷ்ணா பிரசாத் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் First லுக் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மாயாவின் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

SHARE