கனடாவின் இந்தப் பகுதி வாழ் மக்களின் சம்பளம் அதிகரிப்பு

82

 

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சம்பள அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளம் அதகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.பிரிட்டிஸ் கொலம்பியாவில் தற்பொழுது மணித்தியாலம் ஒன்றுக்கு 16.75 டொலர்கள் என்ற தொகை சம்பளமாக வழங்கப்படுகின்றது.

ஜூன் மாதம் முதல் இந்த தொகை 17.40 டொலர்கள் என அதிகரிக்கப்பட உள்ளது. மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளம் 3.9 சதவீதத்தினால் உயர்த்தப்படுவதாக மாகாண தொழில் அமைச்சர் ஹரி பய்ன்ஸ் அறிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு குறித்த சட்டத்தில் திருத்தம் ஊடாக இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளது.

இனி வரும் காலங்களில்; பணவீக்க வீதத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச சம்பள நிர்ணயம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

SHARE