கனடாவில் மோசடிச் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துச் செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அதிகளவான கனடியர்கள் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு மோசடிகள் எண்ணிக்கை அதிரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இகிவ்பெக்ஸ் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மக்கள் நிதி நெருக்கடிகள் ஏற்படும் போது சமூகத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என இகிவ்பெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் செரோல் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.
மோசமானடிய முறையில் ஆள் அடையாள ஆவணங்களைக் கொண்டு வங்கிகளில், நிதி நிறுவனங்களில் மோசடிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அடகுக் கடன் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு மோசடிகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.