கனடாவில் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம்

114

 

கனடாவின் பொதுப் போக்குவரத்துத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ரி.ரீ.சீ போக்குவரத்து சேவையின் தொடர்பாடல், இலத்திரனியல் மற்றும் சமிக்ஞை பணியாளர்கள் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சுமார் 650 பணியாளர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை நள்ளிரவுடன் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கூட்டுப் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

SHARE