கனடாவில் ஓடும் வாகனத்தில் தகாத செயலில் ஈடுபட்ட சாரதி மற்றும் சக பயணி?

66

 

கனடாவில் இளம் சாரதியொருவர் வாகனத்தை செலுத்திக் கொண்டே தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வாகனத்தைச் செலுத்திக் கொண்டு சக பயணியுடன் தகாத செயலில் ஈடுபட்டதாக குறித்த சாரதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.ஒன்றாரியோ மாகாணத்தின் பிட்டர்போ பகுதியின் வீதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனமொன்று விபத்துக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணைகளின் போது சாரதியும் சக பயணியும் தகாத செயலில் ஈடுபட்டதனால் இவ்வாறு விபத்து இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வாகனத்தின் சாரதி மது போதையில் இருந்தமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பொலிஸார் குறித்த சாரதியை கைது செய்துள்ளதுடன் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE