ஒட்டாவாவில் வெட்டிக் கொல்லப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.
சுமார் இருநூறு பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். கனடிய பெளத்த காங்கிரஸ் என்னும் பௌத்த அமைப்பு இறுதிக் கிரியை நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இன்பினிட்டி கன்வென்சன் நிலையத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் மற்றுமொரு நபரும் கொல்லப்பட்டனர்.
19 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் இந்த படுகொலைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளில் கனடிய அமைச்சர் கெரி ஆனந்த சங்கரி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
கெரி ஆனந்த சங்கரி உள்ளிட்டவர்கள் இந்த இறுதிக் கிரியைகளில் இரங்கல் உரைகளை நிகழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொறன்ரோ மற்றும் ஒட்டாவைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் இந்த இறுதிக் கிரியை நிகழ்வுகளை வழிநடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.