கனடாவில் துப்பாக்கி முனையில் அலைபேசி கொள்ளை

106

 

கனடாவில் துப்பாக்கி முனையில் அலைபேசியொன்றை இரண்டு பேர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

முகநூல் வழியாக விளம்பரம் செய்யப்பட்ட அலைபேசியொன்றை கொள்வனவு செய்வதற்காக சென்ற நபர்கள் இவ்வாறு அலைபேசியை கொள்ளையிட்டுள்ளனர்.

ஸ்காப்ரோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனமொன்றில் வந்த இரண்டு பேர் அலைபேசியை காண்பிக்குமாறு கோரியதாக, அலைபேசி உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் காரிற்கு சென்றதாகவும் அப்போது அந்த நபரை தடுக்க முயற்சித்த போது துப்பாக்கியைக் காண்பித்து தம்மை குறித்த நபர்கள் மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

19 வயதுடைய கோவென்ட் முரே மற்றும் ஜாசியா கிரிப்த் ஆகியோர் இவ்வாறு அலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

SHARE