கனடாவில் நாய்கள் தாக்கி பலியான 11 வயது சிறுவன்

101

 

கனடாவில் நாய்களின் தாக்குதலுக்கு இலக்கான 11 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

கனடாவின் தென்கிழக்கு எட்மோன்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பெரிய நாய்கள் குறித்த சிறுவனை கடித்து குதறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாய் கடிக்கு இலக்காகிய சிறுவன் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது படுகாயமடைந்த சிறுவானை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நாய்களையும் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பிடித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு நாய்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நாய்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE