கனடாவில் பனிப்புயல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

79

 

கனடாவின் பல்வேறு பகுதிகளில் பனிப்புயல் தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இளவேனிற் காலம் ஆரம்பமாகும் முதல் வாரத்தில் பனிப்புயல் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்பேர்ட்டா மாகாணத்தில் 10 முதல் 30 சென்றிமீற்றர் பனிப்பொழிவு நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவிலும் பனிப்பொழிவு நிலைமைகளை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடும் பனிப்பொழிவு காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

SHARE