கனடாவில் பரபரப்பு சம்பவம்… வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 4 பேர்!

120

 

கனடாவின், சஸ்கற்றுவானில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தென் சஸ்கற்றுவானின் கிராமிய வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தில் வயது வந்தவர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் மரணங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE